Sunday 15 November 2015

தெரிந்து கொள்ளலாம்.

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
 சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
 மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
 வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..


Saturday 14 November 2015

அடை மழை.:))))

பேரன் :::  பாட்டீ, இப்டி மழை கொட்டினா நான் எப்டி பாட்டீ வெளயாடப்போவேன்?

பாட்டி:::  ஐப்பசியில அடை மழை பெய்யறது சகஜம்டா கொழந்தே, வா நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி வெளயாடலாம்.

பேரன் :: போ பாட்டி, அத நான் ரோடுலயே வெளயாடிக்கிறேன். ஆமா, என்னமோ மழைன்னு சொன்னியே, அதென்ன பாட்டீ?

பாட்டி:: அடைமழைடா.

பேரன் ::  ஐப்பசில அடைமழைன்னா, கார்த்திகைல தோசைமழை, மார்கழில இட்லிமழை எல்லாம் பெய்யும்ல? ஐய்யா! ஜாலி!

பாட்டி:: ஙே! ஙே! ஙே!

Friday 13 November 2015

kaanji mahan.நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
 காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
 ஹாலில் வரிசையாக அமர்வார்கள்.

 ஒவ்வொருவராக சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள் .இவர் முறை வந்தது. சாமி நான் கேக்கற கேள்விகொஞ்சம் உங்களை சங்கடப்படுத்தும்.
 தவறாக எண்ணக்கூடாது என்றார். சாமிகளும் என்னப்பா கேட்டுக்கோயேன்
 என்றார். வந்து சாமி, இந்த காய்கறிகள், பழங்கள் ,பூக்கள்,இதுக்கெல்லாம்
 உசிர் உண்டா என்றார். அதிலென்னப்பா சந்தேகம். எல்லாத்துக்குமே உசிர்
 உண்டுப்பா என்றார். அப்போ சாமி, சில பேரு ஆடு, கோழி, மீன் வெட்டி சாப்பி
டராங்க இல்லியா? ஒரு உசிரைக்கொன்னுதின்னா பாவம்னு உங்களைப்போல
 பெரியவங்க சொல்ராங்க.அப்ப காய்,பழம்எல்லாத்துக்குமேஉசிர்இருக்குன்னா
அதுவெட்டி சாப்பிட்டா அதுபாவமில்லையான்னு கேட்டார். சாமிகள் கொஞ்ச
 நேரம் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார். என்ன சாமி பதில் சொல்ல முடியலியா? என்றார். சாமிகள் பொறுமையாக, பதில் சொல்லலாம்பா. அதை
உனக்கு புரியும்படி எப்படி சொல்வதுன்னு யோசிச்சேன், என்றார். எதானாலும்
 சொல்லுங்க சாமி. என்றார்.

 சரி இப்ப விஷயத்துக்கு வரலாம், ஆடு கோழி வெட்டி சாப்பிடரவங்க, அந்த
பிராணி களை வெட்டும்போது அதுகளுக்கு வலி வேதனை உண்டாகுமா இல்லியாஅந்தபிராணிகளைதிரும்பவளரவைக்கமுடியுமா.முடியாதுஇல்லியா
 இப்போ காய் பழம் ஒரு மரத்லேந்து எடுக்கரோம். இதுக்கு உனக்கு புரியும்படி சொல்லணும்னா நம்ம உடம்புலயும் உசிர் இருக்கு எல்லா அவயவங்களிலும்
உசிர் இருக்கு. ஆனா மாசா மாசம் நாம முடி வெட்டிக்கரோம், நகம் வெட்டிக்கரோம். நம்ம உடம்புக்கு தேவை இல்லாததால அதை நீக்கரோம்.
முடி நிறையா வளந்தா எவ்வளவு க்‌ஷ்டமா இருக்கு தேவைக்கு அதிகமாகும்
 பொருளை வெட்டி எறிஞ்சுடரோம். நகமாகட்டும் முடி ஆகட்டும். அப்பா முடிக்
க்கோ, நகத்துக்கோ வலியோ வேதனையோ உண்டாகுமா? இல்லைய்தானே?
நம்ம உடம்புலேந்து நீக்கின பிறகு அதுகள் வளருமோ இல்லியே. நம்ம அதை
 நீக்கின பிறகு அதுக்கு எந்த சக்தியுமேஇல்லை.

 அதுபோல காய் பழம் மரத்ல இருக்கும்வரையில் அதுக்கும் உசிர் இருக்கு.
 மரத்துக்கு தேவைக்கு அதிகமாகி நாம பரிச்சப்பரம் அதுக்கு ஏது உசிர். தவிர
 திரும்பவும் அந்தமரத்ல காய் காய்க்கும் ,பூ பூக்கும் ,பழம் பழுக்கும். நாம
 மரத்தை வேரோட வெட்டிச்சாய்க்கலை. மரத்துக்கு தேவைக்கு அதிகமாக
இருப்பதை நாம எடுக்கறோம். நகதுக்கும், முடிக்கும் எப்படி வலி இருக்காதோ,
 அதுபோல காய்களுக்கும் பழத்துக்கும் வலிஇருக்காது.மரத்திலேந்துபரித்ததும்
அதுகளுக்கு உசிரும் இருக்காது. அதனால இது பாவம் கிடையாது என்றார்.
சுற்றி உள்ள பக்தர்கள் சாமியின் விளக்கம் கேட்டு திருப்தியுடன் தலையை
அசைத்து ஏற்றுக்கொண்டனர். ஆனா அந்த பக்தரோ சாமி புரியுது ஆனா
புரியலை. ஒரே குழப்பமாஇருக்கேன்னே  சொல்லிட்டு அங்கேந்து போனார்.


Thursday 17 July 2014

பார்த்ததில் பிடித்தது
படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் படம் கொஞ்சம் பெரிதாகத்தெரியும்

Tuesday 15 July 2014

வலை பாயுதே

வாயாலெயே   கெட்டுப்போனவன்  தமிழன் என்பதற்கு சாட்சியாக,  தெருவுக்கு நாலு பஜ்ஜி கடைகளும், ரீசார்ஜ் கடைகளும்.

கிணற்றில் தண்ணீர் இறைத்த கடைசித்தலை முறையும் நாம் தான்.

குருக்கள் கொடுக்கிற பொங்கல் முடிஞ்சிடுமேங்குற கவலையில் ஃபாஸ்ட்டா கோயில் பிரகாரத்தைச்சுற்றிவருவதுதான் உண்மையான ‘டெம்பில்ரன்’

காலையில் ஆம் ஆத்மி கட்ச்சிக்காரங்க ஓட்டு கேட்டு வந்தாங்க.வெளக்குமாறு விக்கவந்தவங்கன்னு நெனச்சு  என் அம்மா போயிட்டு அடுத்தமாசம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.

வீட்ல ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு நாலு வகையான சட்னி கெடைக்குது. நேத்து வச்சது, முந்தா நா வச்சது, காலேல வச்சது.
( நன்றி விகடன்)                                                                        (தொடரும்)

Saturday 28 June 2014

படித்ததில் பிடித்தது.

 நிறைய பேரு ஆனந்த விகடன் படிப்பீங்க. நானும்தான். அதில் எந்தப்பகுதி பிடிக்கும்னு குறிப்பா சொல்லணும்னா கஷ்டம்தான். எல்லா பகுதிகளுமே
 ரொம்ப நல்லா இருக்கும். வலைபாயுதேன்னு ஒரு பகுதி வருது. அதில்
ட்விட்டரில் நிறைய பேரு ட்வீட்டி இருப்பாங்க. படிக்கவே சில விஷயங்கள்
 மிக சுவாரசியமாக இருக்கும். அதிலிருந்து சில ட்வீட்கள்  உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப்பகிர்வு.  விகடன் படிக்காதவங்களுக்கு இது சுவாரசியமான விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அழுத கண்ணில் இருக்கும் கண்ணீர் காய்வதர்க்குள்ளேயே சிரிப்பதற்கு
குழந்தைகளால் மட்டும்தான் முடியும்.

உங்கள் பண தைரியத்தைப் பாராட்டி ஒரு டப்பா சோளப்பொறி நூத்தம்பது ரூபா.  #  மல்டிப்ளெக்ஸ்.

கல்யாணத்துக்குப்பிற்கு பொம்பிள்ளைகளுக்குத்தாலி, ஆம்பிள்ளைகளுக்கு,
டப்பர்வேர்.

ரசத்தில முள்ளங்கி இருந்தா அது சாம்பாரா இருக்கலாம்.# அது ஹாஸ்டல் மெஸ் ரகசியங்கள்.

தட்டிக்கொடுத்து வேலை வாங்குறது டி.வி. ரிமோட் கண்ட்ரோல்கிட்ட மட்டும்தான்.

சாட் பூட் த்ரீ போட்டு முடிவெடுத்தவரை, வாழ்க்கை அழகாகவும் எளிமையாகவும் இருந்தது.

 எதை நினைச்சு ஃபேஸ்புக் ஆரம்பிச்சானோ தெரியல்லே. ஆனா அது தமிழ் நாட்ல மட்டும் ஏகப்பட்ட பேரை எழுத்தாளரா ஆக்கிவிட்டிரிச்சு.# ஹல்லோ
 மிஸ்டர் மார்க் இருக்காரா?

 நமக்குத்தான் அவை சுவரொட்டிகள்.  கழுதைக்கு அது சுவை ரொட்டிகள்.

குழந்தைகளின் அறிவை நிரூபிக்க, மா நிலங்களின்,/ நாடுகளின் தலை நகரை
ச்சொல்லச்சொல்வதைத்தவிர வேறு வழியே கண்டு பிடிக்கப்படஃவில்லையா?

உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், டீயில் தோய்க்கப்பட்ட பிஸ்கெட் தவறி டீக்குள்  விழுவதுதான்.

( நன்றி ஆனந்த விகடன் வலை பாயுதே)

                                                                                                                   (தொடரும்)

Saturday 14 June 2014

திருத்தம்.

 நான் முதலில் போட்டிருந்த பதிவில் தலைப்பு போட மறந்து விட்டேன்.  அவசரம், அவசரம்.